பொலிஸ் நிலையம் சென்ற சஜித் பிரேமதாச! அரசாங்கம் தொடர்பில் கடும் விமர்சனம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு-தெஹிவளை பொலிஸ் நிலையத்துக்கு நேரில் வருகை தந்துள்ளார்.
இவரது வருகையானது இன்றைய தினம்(06.05.2026) இடம்பெற்றுள்ளது.
அஷானை பார்வையிடல்
அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்த குற்றச்சாட்டின் கீழ் தெஹிவளை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் அஷான் கோட்டேகொடவின் நலன்களை விசாரிக்கும் நோக்கில் அவர் தெஹிவளைப் பொலிஸ் நிலையத்துக்கு விஜயம் செய்திதுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தின் ''க்ளீன் ஸ்ரீலங்கா'' செயற்திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் ஒருங்கிணைப்பாளர்கள் பிரதேச செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்களின் அதிகாரங்களில் தலையீடு செய்வதாக அஷான் கோட்டேகொட சமூக வலைத்தளங்களில் விமர்சனம் ஒன்றை முன்வைத்திருந்தார்.

இதனையடுத்து, அவர் தற்போதைக்கு தெஹிவளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அஷான் கோட்டேகோடவின் கைது சம்பவம் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான பாரிய அச்சுறுத்தல் என விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அஷானின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உச்சபட்ச சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவருடன் சட்டத்தரணிகள் மற்றும் தெஹிவளை-கல்கிஸ்ஸை நகர சபை உறுப்பினர்கள் சிலரும் பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளித்திருந்தனர்.
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan