போர் பதற்றத்தினால் கடுமையாக உயர்ந்த எரிபொருள் விலை - பெரும் சிக்கலில் விமானப்பயணங்கள்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய விமானப்பயணங்கள் பெரும் சிக்கலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர் பதற்றம் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி 10 வாரங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளதால் கடுமையாக உயர்ந்துள்ள எண்ணெய் விலைகள் உலகளாவிய விமானத்துறையைப் பாதித்துள்ளன.
எரிபொருளின் விலை உயர்வு
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது இராணுவத்தாக்குதல்களை தொடங்கியதிலிருந்து, கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் ஜெட் எரிபொருளின் விலை 80 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக விமான நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தவும் அல்லது விமானப் பயணங்களைக் குறைக்கவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளன.
ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை விமானங்களில் இருந்து இருக்கைகளைக் குறைக்கவும் விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
கட்டணங்கள் கணிசமாக உயர்வு
அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், எரிபொருள் செலவுகளை ஈடுகட்டுவதற்காகப் பயணிகள் கட்டணங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.
போர்சூழல் மற்றும் ஜலசந்தி மூடப்பட்டுள்ளமை காரணமாக விநியோகச்சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறு, வரவிருக்கும் பயணக்காலத்தில் விமானப் பயணிகளை கடுமையாகப் பாதிக்கும் என்று கூறப்படுகின்றது.
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan