ஆட்சி அமைத்ததன் பின்னர் இலங்கை வரும் விஜய்! சபையில் இன்று அறிவிப்பு..
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினூடாக ஆட்சி அமைந்த பின்னர் விஜய் இலங்கை வருவார் என நம்புகின்றோம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இன்று(06.05.2026) நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, கடற்றொழிலாளர்களின் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குப் புதிய உறவின் ஊடாகத் தீர்வை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் ஜீவன் எம்.பி சுட்டிக்காட்டினார்.
விஜயின் இலங்கை வருகை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விஜயை இதுவரைகாலம் நடிகராகப் பார்த்த மக்கள் தற்போது தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் வாக்குகளினூடாக தமிழகத்தில் இன்று புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.

நான் அமைச்சராக இருந்தபோது அதிக தடவைகள் தமிழ் நாடு சென்றுள்ளேன். அங்கு கச்சத்தீவு என்பது முக்கிய பிரச்சினை கிடையாது.
அத்துடன், தமிழகத்தில் முகாம்களில் வாழும் நமது சொந்தங்களின் பிரச்சினையே முதன்மையானது. அதேபோல் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளும் தொடர்கின்றன.
இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சியின் கீழ் விஜய் இலங்கை வருவார் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
இந்தப் புதிய உறவின் ஊடாக மேற்படி பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என நம்புகின்றோம் என்றார்.
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan