வாய்ச்சவடால் விடுவதை விடுத்து முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்! சஜித் தரப்பின் நேரடிச் சவால்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து வாய்ச்சவடால் விடுவதை விடுத்து, உடனடியாகத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாகாணங்களிலும் ஆளுங்கட்சி வெற்றி பெறும் என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வெளியிட்ட கருத்துக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து கயந்த கருணாதிலக எம்.பி. ஊடகங்களிடம் மேலும் கூறுகையில், "அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள்ளேயே மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கு சரிந்துவிட்டது.
மக்கள் அதிருப்தி
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்தநிலையில் வடக்கு, கிழக்கில் வெற்றி பெறுவோம் என்று கூறுவது வெறும் பகற்கனவு மாத்திரமே.

தேசிய மக்கள் சக்திக்கு உண்மையாகவே மக்கள் செல்வாக்கு இருந்தால், தேர்தலை நடத்த ஏன் அஞ்ச வேண்டும்?
உரிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்துவோம் என்று இழுத்தடிப்புச் செய்யாமல், உடனடியாக ஜனநாயக ரீதியாகத் தேர்தலை நடத்தி மக்கள் யாருக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதைப் பார்க்குமாறு சவால் விடுகின்றோம்.
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளது" என்றார்.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri