அமெரிக்க-இஸ்ரேல் போரில் 350 அரசு ஊழியர்கள் பலி: ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் தொடங்கிய கடந்த ஐந்து மாதங்களில், தாக்குதல்களுக்கு இலக்காகி 350-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஃபாதேமே மொஹஜேரானி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களைச் சந்தித்துப் பேசிய பின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்காகப் பணியாற்றிய போதே இவர்கள் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, ஹோர்மோஸ்கான் பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகளைப் பராமரிப்பதற்காக கோபுரங்களில் பணியாற்றிய பொறியாளர்கள், மின் விநியோகத்தைச் சீராக வைக்க உயிரைத் தியாகம் செய்த மின்சாரத் துறை ஊழியர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் இந்தத் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.
அவர்களின் இந்தத் தியாகத்திற்கும் சேவைக்கும் நாடு என்றும் கடமைப்பட்டுள்ளது என்றும் அவர் தனது அஞ்சலி செய்தியில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan