தீவிரமடையும் காட்டுத்தீ: ஸ்பெயினில் புதிய வெப்ப அலை எச்சரிக்கை!
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் ஒரு புதிய வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பரவி வரும் பயங்கர காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
வரலாறு காணாத இந்த வெயில் மற்றும் காட்டுத்தீ காரணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரான்சின் போர்டோ பிராந்தியத்திலும், ஸ்பெயினின் மாட்ரிட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காட்டுத்தீ கட்டுப்பாடற்ற முறையில் பரவி வருகிறது.
காட்டுத்தீ
நிலைமையின் தீவிரத்தைக் குறிப்பிட்டுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரான்ஸ் சந்திக்கும் மிகக் கடுமையான காட்டுத்தீ அசம்பாவிதம் இதுவே என்று தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினில் இதுவரை 73,000-க்கும் அதிகமான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 66,000 பேர் பாதுகாப்பான இடங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாரிஸில் வெப்பநிலை 38°C வரையிலான புதிய உச்சத்தை எட்டும் என்றும், ஸ்பெயின் இந்த கோடைகாலத்தின் 4ஆவது வெப்ப அலையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தீவிர வெப்பம்
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமே இத்தகைய தீவிர வெப்பத்திற்கும், வறட்சிக்கும், காட்டுத்தீ வேகமாகப் பரவுவதற்கும் காரணம் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தத் தீவிர வெப்பம் காரணமாகப் பயிர் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் 2026 விவசாய அறுவடை கணிப்புகளும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri