தயக்கமின்றி கைது செய்யுங்கள்! சபையில் பகிரங்கமாக உறுதி வழங்கிய சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரேனும் பாதாள உலகச் செயற்பாடுகள் அல்லது போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராகத் தயக்கமின்றி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20.02.2026) நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவரால் கடந்த மாதம் எழுப்பப்பட்டிருந்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, "பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருவர் சம்பந்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளிக்கும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சட்டவிரோதச் செயல்களை நாம் அனுமதிப்பதில்லை
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "எமது கட்சி ஒருபோதும் பாதாள உலகச் செயற்பாடுகளுக்குத் துணை போவதோ அல்லது அதனை ஊக்குவிப்பதோ கிடையாது. கொலை, கொள்ளை மற்றும் மோசடி போன்ற எந்தவொரு சட்டவிரோதச் செயல்களையும் நாம் அனுமதிப்பதில்லை; அவற்றை முழுமையாக நிராகரிக்கின்றோம்.

எனவே, எமது கட்சியைச் சேர்ந்த யாராவது இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகச் சான்றுகள் இருக்குமானால், ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் அவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அவர்களுக்கு எதிராக நீதியை நிலைநாட்டும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்." - என்று அவர் சபையில் உறுதியளித்தார்.
உலக நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சி : உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிரடியாக ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam