போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்: இருக்கைகளைப் பரிசோதிக்க அமெரிக்க வான்வெளி நிர்வாகம் எச்சரிக்கை!
அமெரிக்காவின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் பயணிகளின் இருக்கைகள் தவறாகப் பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அவற்றை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கக் கூட்டாட்சி வான்வெளி நிர்வாகம் (FAA) எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட 453 போயிங் விமானங்களில் இந்தப் பிரச்சினை இருக்கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவசரக் காலத்தில் விமானங்கள் தரையிறங்கும்போது இந்த இருக்கைகள் தளர்ந்து கழன்று விழக் கூடும் என்றும், இதனால் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்குக் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், அவசர காலங்களில் மக்கள் வெளியேறும் வழியையும் அடைக்கக்கூடும் என்று FAA தெரிவித்துள்ளது.
பரிசோதனை
இந்த உத்தரவு அமெரிக்கப் பதிவெண் கொண்ட விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், பிற நாட்டு வான்வெளி அமைப்புகளும் அமெரிக்காவின் இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றிப் பரிசோதனைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

இது குறித்து போயிங் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிறுவனம் ஏற்கனவே கடந்த டிசம்பர் 2025-இல் விமான நிறுவனங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கிவிட்டதாகவும், அதைத் தற்போது FAA கட்டாயமாக்குவதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri