ரஷ்ய படையெடுப்பினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை வெளியிட்டுள்ள உக்ரைன்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
அந்நாட்டின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.
போர் நிறுத்தம் அறிவித்த நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்கின்றன.
உக்ரைனின் மற்ற நகரங்களையும் ரஷ்ய படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் (₹77,000 கோடி) சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா படையெடுப்பின் காரணமாக உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்புக்கு சுமார் 10 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை கணக்கிடப்பட்டது.
பெரும்பாலான சேதமடைந்த கட்டமைப்புகள் ஒரு வருடத்தில் சரிசெய்யப்படும், மிகவும் கடினமானவை இரண்டு ஆண்டுகளில் சரிசெய்யப்படும். ஞாயிற்றுக்கிழமையன்று கிழக்கு நகரமான கார்கிவில் இருந்து 40,000 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆனால், பொதுமக்கள் மற்ற நகரங்களை விட்டு வெளியேற அனுமதிக்குமாறு ரஷ்யாவிடம் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது" எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
மனிதநேய பாதையில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ள ரஷ்யா! கடும் வேதனையில் உக்ரைன் அதிபர்
உக்ரைனின் வான்வழி தாக்குதலில் பலியான 21 பேரின் உடல்கள் மீட்பு
ரஷ்யாவின் முயற்சி படுதோல்வி! - உக்ரைன் படையினர் அதிரடி