உக்ரைனின் வான்வழி தாக்குதலில் பலியான 21 பேரின் உடல்கள் மீட்பு
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் அமைந்த சுமி நகரை முற்றுகையிட்டு நடந்த வான்வழி தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், ரஷ்யாவிற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் சுமி நகரில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
எனினும், உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் அமைந்த சுமி நகரை முற்றுகையிட்டு நடந்த வான்வழி தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்...
ரஷ்யாவின் முயற்சி படுதோல்வி! - உக்ரைன் படையினர் அதிரடி
ரஷ்ய அதிபரின் உடல்மொழி (Body Language) வெளிப்படுத்தும் செய்தி!! அடுத்து என்ன?