ரஷ்யாவின் முயற்சி படுதோல்வி! - உக்ரைன் படையினர் அதிரடி
உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைய முயற்சித்ததை உக்ரேனிய படையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, எல்லைக்கு அருகில் 120 ரஷ்ய பராட்ரூப்பர்களின் திட்டமிட்ட நடவடிக்கையை உக்ரைன் படையினர் முறியடித்ததாக ஓலே சினேஹுபோவ் தெரிவித்துள்ளார். அவர்கள் கார்கிவ் நகருக்கு வடகிழக்கே 31 மைல் தொலைவில் தரையிறங்கினார்கள்,
எனினும் உக்ரைன் வீரர்களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக, கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு நகரில் 27 உக்ரைன் பொதுமக்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
நாட்டின் இரண்டாவது பெரிய நகரம், 1.4 மில்லியன் மக்கள் வசிக்கும் இடம், கடந்த மாதம் 24ம் திகதி அன்று போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய விமானத் தாக்குதல்களால் அழிக்கப்பட்டது.
இதற்கிடையில், தெற்கு நகரத்தை கைப்பற்ற ரஷ்ய துருப்புக்கள் மேற்கொண்ட பல முயற்சிகளை உக்ரைன் முறியடித்துள்ளதாக மைகோலாயிவ் அதிகாரிகள் கூறுகின்றனர்.



