ரஷ்யாவின் அணு ஆயுத பயிற்சி: புடின் வெளியிட்ட கருத்து
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க தேவைப்படும்போது மட்டுமே அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்ற கோட்பாட்டை ரஷ்யாவின் இராணுவக் கொள்கை கொண்டுள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தனது அணு ஆயுத ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டுவருவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த பயிற்சியில் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் துல்லியமாக ஏவப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
விளாடிமிர் புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிரெம்ளினில் உள்ள அணுசக்தி மையத்தில் இருந்து இந்த பயிற்சியை கண்காணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு பேசிய புடின், "இன்று நாம் மூலோபாய தடுப்பு அலகுகளை பயிற்சி செய்கிறோம்.
இதில், அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும். கடைசி முயற்சியாக மட்டுமே ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்.
இறையாண்மை மற்றும் பாதுகாப்பு
மும்முனை அணு ஆயுதம் (nuclear triad) நமது இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு ஒரு வலுவான உத்தரவாதம் என்றும் இந்த வலிமைகள்தான் உலக சக்திகளுடன் சமநிலையை பராமரிக்க நமக்கு உதவுகின்றன.
உலகளாவிய பதற்றங்கள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் இன்றைய நேரத்தில், நவீன மூலோபாய தடுப்பு அலகுகளை எப்போதும் தயாராக வைத்திருப்பது அவசியம். அவற்றை தொடர்ந்து புதுப்பிப்பதும் முக்கியம்.
மேலும், ரஷ்யா தனது பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் அனைத்து பகுதிகளையும் தொடர்ந்து வலுப்படுத்தும்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |