வவுனியா குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அவல நிலை: வரிசையில் மக்கள்
வவுனியா (Vavuniya) நகர பகுதியில் அண்மையில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் மக்கள் கடவுச்சீட்டுகளை பெற வரிசையில் நிற்க வேண்டிய நிலை நீடித்து வருகின்றது.
வெறும் 25 நபர்களுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 700 தொடக்கம் 1000 பேர் வரையில் இரவு பகலாக வரிசையில் நிற்க வேண்டிய அவல நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அண்மையில் கடவுச்சீட்டுக்களை பெறுவதில் உள்ள தாமதங்கள் நீக்கப்படும் என அறிவித்திருந்த போதிலும் இதுவரை எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதுடன் அசுத்தமான பகுதிகளில் மக்கள் தொடர்ச்சியாக வரிசையில் நிற்கின்றார்கள்.
அடிப்படை வசதி இன்றி நிற்கும் மக்கள்
குறிப்பாக அப்பகுதியில் உள்ள கால்வாயில் கழிவு நீர் ஓடாமல் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றம் வீசி வருகிறது.
அத்துடன் அப்பகுதியில் டெங்கு நுளம்பும் பெருகி காணப்படும், அதேநேரம், அப்பகுதி முழுவதும் வெற்றிலை எச்சில்களும் குப்பைகளுமாக காணப்படுகின்றது.
ஆனால் இது தொடர்பில் வவுனியா நகரசபை, குடிவரவு குடியகல்வு திணைக்களம், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயோதிபர்கள் தொடக்கம் கர்ப்பிணி தாய்மார்கள், சிறுகுழந்தைகளுடனான பெற்றோர்கள் என இரவு பகல் பாராது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீதி முழுவதும் வரிசையில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி நிற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
