எப்ஸ்டீனுடன் ஊடக ஜாம்பவானின் இரகசிய உறவு! அம்பலப்படுத்திய அமெரிக்க நீதித்துறை கோப்புகள் - திடுக்கிடும் தகவல்கள்
அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள இரகசிய கோப்புகளின்படி, மறைந்த தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் ஊடக ஜாம்பவான் மார்டிமர் ஜுக்கர்மன் ஆகியோருக்கு இடையே இருந்த நெருக்கமான மற்றும் விசித்திரமான உறவு குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2015-ஆம் ஆண்டு ஜுக்கர்மனுக்கு அனுப்பிய மின்னஞ்சல்களில், அவருக்குத் தீவிரமான 'நினைவாற்றல் குறைபாடு' இருப்பதாகவும், அது அவரது நிதி மற்றும் உடல் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்றும் எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.
எப்ஸ்டீனின் அறிவுரை
ஜுக்கர்மன் தனது சொத்துக்கள் மற்றும் நிதி விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் நீதிமன்றம் தலையிட நேரிடும் என்றும் எப்ஸ்டீன் வலியுறுத்தியுள்ளார்.

ஜுக்கர்மன் ஒரு காலத்தில் 'நியூயோர்க் டெய்லி நியூஸ்' மற்றும் 'தி அட்லாண்டிக்' போன்ற புகழ்பெற்ற ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர்.
எப்ஸ்டீனின் அறிவுரையை சீரியஸாக எடுத்துக்கொண்ட ஜுக்கர்மன், அவருக்கு நன்றி தெரிவித்ததுடன் இது தொடர்பாக சட்ட ஆலோசனைகளையும் கேட்டுள்ளார்.
வர்த்தக முதலீடு
மேலும், ஜுக்கர்மனின் உறவினரான எரிக் கெர்ட்லரிடம் அவரது பங்குகள், கலைப் பொருட்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை விற்பனை செய்யுமாறும் எப்ஸ்டீன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய எப்ஸ்டீன், ஜுக்கர்மனின் ஊடகங்களில் தன்னைப்பற்றிய செய்திகள் வராமல் தடுக்க முயன்றதும், இருவரும் இணைந்து பல வர்த்தக முதலீடுகளை செய்ததும் இந்த ஆவணங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு