அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக தமிழரசு கட்சி
தமிழரசுக் கட்சியை பேரம் பேசும் சக்தியாக மாற்றினால் நாங்கள் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடிய வாய்ப்புள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (28.10.2024) இடம்பெற்ற வடக்கு பிரதேச செயற்பாட்டு பிரிவினர் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“திசைகாட்டி சின்னத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிலங்கையில் நியமிக்கப்பட்ட வேட்பாளர்கள் யார் என்று தெரியாதவர்கள்.
இப்படியான நிலையில், ஜனாதிபதி அநுரவுக்கு தேர்தலில் கிடைத்த 42 வீத வாக்குகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கிடைக்குமாக இருந்தால் அவர்களுக்கு 100 ஆசனங்கள் கிடைக்கலாம்.
அவர்கள் ஆட்சியமைக்க கொலை, கொள்ளை, ஊழல் மற்றும் மோசடி உட்பட கட்சிகளை சேர்ந்தவர்களை சேர்க்கமாட்டேன் என்றதன் அடிப்படையில் வடக்கு கிழக்கில் நேர்மையான ஒரே ஒரு கட்சி நாங்கள் மட்டும் தான் உள்ளோம்.
எனவே, அவர்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் அதிகளவாக 13 ஆசனங்களை எடுத்தால், அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடிய வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam