ஈரானின் IRIS Dena கப்பல் மீண்டும் கொழும்பு கடற்பரப்பில்! அமைச்சர் வெளியிட்ட தகவல்
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்ட ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற போர்க்கப்பல் கொழும்பிலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜத ஹெரத் தெரிவித்துள்ளார்.
இன்று (19) நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இயந்திரக்கோளாறு
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்ட ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற போர்க்கப்பல் இன்னும் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கப்பல் தற்போது கொழும்பிலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இயந்திரக் கோளாறு காரணமாக கப்பலை திருகோணமலைத் துறைமுகத்திற்குக் கொண்டு செல்ல முடியவில்லை என்றும், அதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவியை மற்றொரு தனியார் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் QR குறியீடு பதிவில் தொடரும் சிக்கல்! போலி இணையத்தளங்கள் குறித்து பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 6 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் காணாமல் போன 2 இளைஞர்கள்: காரில் சடலமாக மீட்பு: பொலிஸார் வழங்கிய தகவல் News Lankasri