மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்! திடீரென இரத்துச்செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள்
மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமானச் சேவைகள் இரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு மற்றும் துபாய்க்கு இடையேயான UL231/UL232 விமானங்கள் இன்றும் (19) நாளையும் (20) இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் QR குறியீடு பதிவில் ஏற்பட்டுள்ள சிக்கல்! இன்று முதல் வாகன உரிமையாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய அம்சம்
விமானங்களின் நிலவரங்கள்
மேலும் UL253/UL254 (கொழும்பு–தம்மம்), UL217/UL218 (கொழும்பு–தோஹா), மற்றும் UL229/UL230 (கொழும்பு–குவைத்) ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானங்களின் நிலவரங்கள் குறித்த சமீபத்திய தகவல்களுக்கு, விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் வழியாகத் தவறாமல் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பயணிகளுக்கான அறிவுறுத்தல்
பயணங்களுக்கான முன்பதிவுகளை செய்தவர்கள் தங்களின் போக்குவரத்து தொடர்பில் 1979 எனும் துரித தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகங்களுக்குச் சென்று வானூர்தி சேவைகள் தொடர்பிலான தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்ததோடு, பயணிகளின் புரிதலுக்கும் நன்றியும் தெரிவித்துள்ளது.
NEW கைது செய்ய வேண்டாம் என கோரிய கோட்டாபய! சற்று முன்னர் வெளியான மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம்..
தெல்தெனியவில் வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல் - இன்று வெளிவரப்போகும் முக்கிய விடயம்
வாயில் இரத்தக் கறைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது யுவதி! வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri