அத்தியாவசிய உணவுப்பொருட்களின் கையிருப்பு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு
பண்டிகைக் காலத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏற்கனவே விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அந்த விண்ணப்பங்களில் தாமதம் ஏற்பட்டாலன்றி உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் கடைக்காரர்களும் மொத்த வியாபாரிகளும் தேவையற்ற முறையில் பொருட்களைச் சேமித்து வைக்கத் தேவையில்லை என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள்
எனவே, மொத்த வியாபாரிகள், குறிப்பாக கொழும்புக்கு வெளியே உள்ளவர்கள், அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைக்கத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளதால், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் உயர்வு இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.