600 ரூபாவை நோக்கி நகரும் டீசலின் விலை! வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்
இலங்கையில் டீசல் விலை ஒரு லீட்டருக்கு 550 முதல் 600 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏப்ரல் மாதம் வரவிருக்கும் எரிபொருள் கப்பலின் விலையை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
தவிர்க்க முடியாதபடி பெரும் உயர்வைச் சந்திக்கும் விலை
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ள டீசல் கப்பலின் விலை மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் காரணமாக உள்ளூர் சந்தையில் டீசல் விலை தவிர்க்க முடியாதபடி பெரும் உயர்வைச் சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மீண்டும் வரிசைகள் உருவாகியுள்ளமைக்கு அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமே காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எரிபொருள் கொள்வனவுக்கான நடவடிக்கைகளை உரிய காலத்திலும், முறையான திட்டமிடலுடனும் முன்னெடுக்க அரசாங்கம் தவறியுள்ளமையே இந்த நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாக தயாசிறி ஜயசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri