24 மணி நேரத்திற்குள் வெளியேறுங்கள்! ஈரானிய தூதரக பணியாளர்களுக்கு கட்டார் அதிரடி உத்தரவு
கட்டாரில் உள்ள ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் தூதரக பணியாளர்களை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேறுமாறு கட்டார் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஈரான் தூதரகத்தில் உள்ள இராணுவ மற்றும் பாதுகாப்புத் தூதர்களையும் அவர்களது ஊழியர்களையும் "விரும்பத்தகாத நபர்கள்" என அறிவித்து, 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பாரிய அழிவை நோக்கித்தள்ளும் போர்
வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநர் இப்ராஹிம் யூசிஃப் ஃபக்ரோ மற்றும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் அரசிற்கான தூதர் அலி சலேஹாபாதி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின் போது இந்த பணிப்புரை அறிவிக்கப்பட்டது.
ஈரான் இந்தப் பிராந்தியத்தைப் பாரிய அழிவை நோக்கித் தள்ளுவதாகக் குற்றம் சாட்டியுள்ள கட்டார் வெளிவிவகார அமைச்சு, இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஈரானியத் தரப்பின் இந்த விரோதமான அணுகுமுறை தொடர்ந்தால், கட்டார் தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதை உறுதிசெய்யும் வகையில் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அமைச்சகம் வலியுறுத்தியது.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri