நடுக்கடலில் பயணித்த கப்பல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கட்டார், ராஸ் லஃபான் பகுதிக்கருகில் நடுக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பல் ஒன்றின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சம்பவம் தொடர்பில் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், குறித்த பகுதியில் பயணிக்கும் ஏனைய கப்பல்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது. ஈரானில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி முனையத்தில், ஈரானின் ஏவுகணைகள் விழுந்ததில் பல வசதிகள் பலத்த சேதமடைந்துள்ளன.
விரும்பத்தகாத நபர்கள் அறிவிப்பு
நான்கு ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்ட நிலையில், ஒன்று இலக்கை எட்டி பெரும் தீயை உண்டாக்கியுள்ளது.

அடுத்த சில மணிநேரங்களில் அபுதாபியின் ஹப்ஷன் எரிவாயு நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. "இனி கத்தார் மீது கை வைத்தால் அமெரிக்கா சும்மா இருக்காது" என டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், ராஸ் லஃபான் எரிவாயு நிலையத்தில் ஈரான் தாக்குதலால் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாக கத்தார் அறிவித்த நிலையில், ஈரான் தூதரகத்தின் இராணுவ மற்றும் பாதுகாப்புத் தூதர்களை கத்தார் விரும்பத்தகாத நபர்களாக (persona non grata) அறிவித்துள்ளது.
எரிபொருள் QR குறியீடு பதிவில் தொடரும் சிக்கல்! போலி இணையத்தளங்கள் குறித்து பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை
NEW கைது செய்ய வேண்டாம் என கோரிய கோட்டாபய! சற்று முன்னர் வெளியான மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம்..
தெல்தெனியவில் வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல் - இன்று வெளிவரப்போகும் முக்கிய விடயம்
வாயில் இரத்தக் கறைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது யுவதி! வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri