நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றத்தின் பின்னணியில் பாதாள உலக உறுப்பினர்கள் - வெளியான காரணம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கட்டுவெல்லகம சுரேஷ் என்பவரே தலைமை தாங்கியுள்ளதாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மதியம் ஏற்பட்ட நிலைமையைத் தொடர்ந்து, கைதிகள் ஆயுதம் ஏந்தக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், சிறை அதிகாரிகள் நேற்று இரவு ஆயுதக்கிடங்கிலிருந்து துப்பாக்கிகளை அகற்றியுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!
சிறை அதிகாரிகள் மீது கொடூரமாக தாக்குதல்
இந்நிலையில், இன்று அதிகாலை வரை அமைதியாக இருந்த கைதிகள், மீண்டும் ஒன்று திரண்டு சிறை அதிகாரிகளைக் கொடூரமாக தாக்கி, அவர்களின் கைபேசிகளைப் பறித்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மோதல் காரணமாக ஏற்பட்ட அமைதியின்மையால் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன்,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதல் நடந்த சிறையில், பல்வேறு குற்றக்கும்பல்களுடன் தொடர்புடைய 26 பாதாள உலக உறுப்பினர்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான கட்டுவெல்லகம சுரேஷ் என்பவரே மோதலுக்கு தலைமை தாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
போதைப்பொருள் கடத்தல்
போதைப்பொருள் கடத்தல் சம்பவம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவர் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல், கொள்ளை, போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
2016-ஆம் ஆண்டில் நாரம்மலை பகுதியில் துறவியையும் அவரது உதவியாளரையும் தாக்கியதாகவும் இந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அவர் மீதான ஒரு வழக்கு நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும்ஈ மற்றுமொரு வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
you may like this video
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri