வடக்கிற்கு அனுரவின் முடிவு - பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு விவகாரம்
பலாலி விமான நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 1000 ஏக்கர் காணிகளில் தற்போது இராணுவத்தினர் பயிர்ச் செய்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், அதற்குப் பதிலாக மக்களுடைய காணிகளை அவர்களுக்கே மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்திற்கு, 1987 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் அனுமதி வழங்கியது.
இதன்போது, அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களின் காணிகளும் இராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை பலாலி விமான நிலையம் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவில்லை.
அதற்குப் பதிலாக, இராணுவத்தினர் அங்கு கலியாட்டங்கள் நிகழ்வுகள், ஹோட்டல் வசதிகள் மற்றும் பயிர்ச் செய்கைகள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இத்தகைய பிரச்சினைகளுக்கு தற்போதைய அநுர அரசாங்கம் தீர்வு காணும் என்றும், மக்களின் காணிகளை விடுவித்து பலாலி விமான நிலையத்தை முறையாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விளக்கங்களை காணொளியில் பார்க்கலாம்.