மகனை சந்திக்க காத்திருந்த சுரேஷ் சலேவிற்கு பெரும் அதிர்ச்சி! மன அழுத்தத்தின் உச்சம்
தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுரேஷ் சலேவின் கைதுக்குப் பின்னர், அடுத்ததாக யாரெல்லாம் கைது செய்யப்படவுள்ளனர் என்ற தேடலும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலருக்கு எதிராக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், இது சில அரசியல் தலைமைகளுக்கு பெரும் அதிர்ச்சியாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி! சந்தேகத்துடன் இருந்த அயதுல்லா அலி கமேனி - வெளியாகும் புதிய தகவல்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் கைது செய்யப்பட்டதற்கு பின்னரே சுரேஷ் சலேவும் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சுரேஷ் சலேவிற்கு நேரடி தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டத்தரணி உதய கம்பன்பில கூறியதுபோன்று, அடுத்ததாக கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியும் தற்போது பலரிடையே எழுந்துள்ளது.
பிள்ளையான் கைது செய்யப்பட்டபோது அவரது தரப்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி உதய கம்பன்பில இந்த தகவலை வெளிப்படுத்திய விதம் அப்போது ஆட்சியில் இருந்த பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஆழமாக ஆராய்கிறது “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சி,