ஈரானின் அறிவிப்பால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம்! குறிவைக்கப்பட்ட அமெரிக்க வங்கிகள்
வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க வங்கி கிளைகள் மீதான தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்தப்போவதாக ஈரான் புரட்சிகர இராணுவ பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்தும் ஈரானின் வங்கி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கி கட்டமைப்பு செயலிழப்பு
ஈரானிய வங்கி கட்டடங்களுக்கு அருகில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களால் வங்கிச்செயல்பாடுகள் ஸ்தம்பிதமடைந்த நிலையில், பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க வங்கி கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இந்நிலையில், மீண்டும் வங்கி செயல்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தால் வளைகுடா நாடுகளிலுள்ள அனைத்து அமெரிக்க வங்கி கிளைகளும் ஈரானின் சட்டபூர்வமான இலக்குகளாக மாறும் என ஈரான் புரட்சிகர இராணுவ பாதுகாப்புப் படை குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் மிகப்பெரிய செபா வங்கி கட்டடம் மற்றும் மற்றொரு வங்கி கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல ஊழியர்கள் உயிரிழந்ததுடன், வங்கி நடவடிக்கைகள் பல மணிநேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செங்கடலை இலக்கு வைக்கும் ஹவுதிகள்! ஹோர்முஸை தொடர்ந்து மூடப்படும் மற்றுமொரு நீரிணை - கேள்விகுறியாகும் உலக வர்த்தகம்