ரூபாவின் பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம்.
நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற சிங்கள நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை தமிதா அபேரத்னவிற்கு விளக்கமறியல் >>> மேலும் படிக்க
2. நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 37 இராஜாங்க அமைச்சர்களை நியமித்தமை ஒழுக்க விரோத செயல் இல்லையா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர்கள் நியமன விவகாரம்! ரணிலின் ஒழுக்க விரோத செயல் - ஹர்ஷ டி சில்வா சீற்றம் >>> மேலும் படிக்க
3. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் >>> மேலும் படிக்க
4. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொட்டு கட்சிக்குள் மோதல் - நாட்டை விட்டு வெளியேறும் பசில் >>> மேலும் படிக்க
5. இந்திய பெருங்கடல், பசுபிக் தீவு நாடுகளில் சீனாவின் நகர்வுகள் மற்றும் இலங்கையின் நிலைமை குறித்த பாதுகாப்பு கரிசனைகள் தொடர்பில், குவாட் (QUAD)நாடுகளின் அதிகாரிகள் கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டதாக இராஜதந்திர ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குவாட் தலைவர்கள் மாநாடு: இலங்கையின் பாதுகாப்பு குறித்து கரிசனை >>> மேலும் படிக்க
6. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய ராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் பல கட்சிகளை சேர்ந்த 38 பேர் ராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
ரணில் கொடுத்த அமைச்சு பதவிகள் - அதிரடி காட்டிய மைத்திரி >>> மேலும் படிக்க
8. எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் குறைக்கப்படும் எரிவாயு விலை..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு >>> மேலும் படிக்க
9. இலங்கையின் இரண்டு பிரதான அரச வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு பணத்தை வழங்க மறுத்ததன் காரணமாக அடுத்த வாரம் முதல் நெல் கொள்வனவை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த வாரம் அரிசியின் விலையை குறைப்பதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
நிதி தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள இலங்கை அரச வங்கிகள் >>> மேலும் படிக்க
10. இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உண்டியல் ஊடாக சட்டவிரோத டொலர் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக் கற்களை விற்பனை செய்ய அனுப்பப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ளது.
எனினும் அதற்கு நடந்து என்ன என்பது தொடர்பில் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்டியல் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்கத்தின் பிரபல அதிகாரி >>> மேலும் படிக்க