உண்டியல் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்கத்தின் பிரபல அதிகாரி
இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உண்டியல் ஊடாக சட்டவிரோத டொலர் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக் கற்களை விற்பனை செய்ய அனுப்பப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ளது. எனினும் அதற்கு நடந்து என்ன என்பது தொடர்பில் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய இரத்தின கல்
அந்த வகையான பெரிய அளவிலான 4 இரத்தினக்கற்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை கையாள்வதற்கு முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்தத் தகவல்களை வெளியிட்டார்.



