குவாட் தலைவர்கள் மாநாடு:இலங்கையின் பாதுகாப்பு குறித்து கரிசனை
இந்திய பெருங்கடல், பசுபிக் தீவு நாடுகளில் சீனாவின் நகர்வுகள் மற்றும் இலங்கையின் நிலைமை குறித்த பாதுகாப்பு கரிசனைகள் தொடர்பில், குவாட்(QUAD)நாடுகளின் அதிகாரிகள் கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டதாக இராஜதந்திர ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சக பேச்சாளர் அரிந்தம் பாக்சி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு இந்த வார ஆரம்பத்தில் இடம்பெற்றுள்ளது.
குவாட் தலைவர்கள் மாநாடு
அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்களின்
மூத்த அதிகாரிகள் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து, இந்த
மாநாட்டின் போது விவாதித்துள்ளனர்.
கலந்துரையாடப்பட்டுள்ள விடயங்கள்
அமெரிக்க கடலோர காவல் படை கப்பல் "ஒலிவர் ஹென்றி" மற்றும் பிரித்தானிய கடற்படை ரோந்து கப்பல் "HMS ஸ்பே" ஆகியவற்றுக்கு சொலமன் தீவுகள் அனுமதி மறுத்தமை, மற்றும் சீன ஆராய்ச்சிக் கப்பலான யுவான் வாங் 5, இலங்கை வந்தமை ஆகிய நிகழ்வுகளுக்கு பின்னரே குவாட் மாநாடு இந்திய புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், குவாட் (QUAD) அதிகாரிகள் தங்கள் விவாதங்களை, சீனாவை எதிர்க்க
அல்லது கட்டுப்படுத்த முயல்வது போல் சித்தரிப்பது தவறானது என்று கூறியுள்ளனர்.