நடிகை தமிதா அபேரத்னவிற்கு விளக்கமறியல்
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற சிங்கள நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ் உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மௌன நேரம் போராட்டம்
நடிகை தமிதா அபேரத்ன, நேற்று (7) தியத்த உயனவுக்கு எதிரே உள்ள நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் 'மௌன நேரம்' என்ற தொனிப்பொருளில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டார்.
நாடாளுமன்றில் விவாதம்
சட்டவிரோதமாக கூடியிருந்தமை, ஜனாதிபதி அலுவலகத்திற்கு சட்டவிரோதமாக பிரவேசித்தமை மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகளுக்காக நடிகை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடிகை தமிதா அபேரத்ன தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிக்கு இடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.