இலங்கையின் பிரபல சிங்கள நடிகை கைது! நாடாளுமன்றில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் (Live)
இலங்கையின் பிரபல நடிகை தமிதா அபேரத்ன தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிக்கு இடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
சஜித் கேள்வி
காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சிங்கள நடிகை தமிதா அபேரத்ன நேற்று கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த விடயத்தில் சபாநாயகர் தலையீடு செய்து நடிகை தமிதா அபேரத்னவை விடுதலை செய்ய வேண்டும் என்று சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் அரசாங்கத்திற்கு கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்களை ஏன் பிடிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

கோசம் எழுப்பிய நாமல்
சஜித் பிரேமதாச இதனை கூறிக்கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கோசம் எழுப்பியதை அடுத்து, அவரை நோக்கியும் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
அலரி மாளிகையிலேயே வன்முறை ஆரம்பித்தது என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நீதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு இடம்தரப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

இதேவேளை எதிர்கட்சி தலைவரோ, தாமோ முடிவெடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து கருத்துரைத்த சஜித் பிரேமதாச, வன்முறையாளர்கள் யார் என்பது ஹம்பாந்தோட்டை மக்களுக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
ஆதி பிளாக் மெயில் செய்ததால் தற்கொலை செய்துகொண்டு இறந்த இலங்கை பெண்... தாமரைச்செல்வி ஷாக்கிங் நியூஸ் Cineulagam
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri