நாட்டிற்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்! புலனாய்வாளர்களிடம் சிக்கிய முக்கிய ஆவணங்கள்
இலங்கையின் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகளை விசாரிப்பதற்காக களமிறங்கிய இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட புலனாய்வாளர்கள் குழு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சோதணை நடவடிக்கையில், 90 இலட்சம் வாகனங்களின் தகவல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் சோதணை நடவடிக்கை
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாக கூறப்படும் மோசடி மற்றும் ஊழல் குறித்து விசாரிக்கும் நோக்கில், நீதிமன்ற உத்தரவிற்கமைய 29 ஆம் திகதி இந்த திடீர் சோதணை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம், தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் திணைக்களத்தை சேர்ந்த வல்லுநர்களும் பங்கேற்றுள்ளனர்.
சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படுவது குறித்து தொடர்ச்சியாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பான சந்தேகநபர்களை பொலிஸார் சமீபத்தில் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட புலனாய்வாளர்கள் குழு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.