ஈரான் போரின் தாக்கம்: ஐரோப்பிய ஒன்றியத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம்
ஈரான் போரின் தாக்கத்தால் சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் பாரிய எரிபொருள் விலை நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி ஆணையாளர் டான் ஜோர்கன்சன் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எரிசக்தி அமைச்சர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "நாம் தற்போது விநியோக நெருக்கடியுடன் தொடர்புடைய விலை நெருக்கடி ஒன்றையும் எதிர்கொண்டு வருகின்றோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி
கடந்த 2021 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் ரஷ்யா தனது எரிவாயு விநியோகத்தைக் குறைத்தபோது இருந்த நிலையை விட, தற்போது ஐரோப்பிய ஒன்றியம் சிறந்த தயார்படுத்தலில் உள்ளபோதிலும், எதிர்வரும் குளிர்காலத்தை எதிர்கொள்ள அரசாங்கங்கள் தமது ஆயத்தங்களை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, எரிவாயு சேமிப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், தேவைப்படும் காலம் வரை எரிவாயு மற்றும் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri