பல இடங்களில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்
தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனுடைய 39ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனது மக்கள் தொடர்பகத்தில் இன்று (26.09.2026) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
தமிழ் மக்களின் உரிமை
அந்தவகையில் அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடரேற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டன.

மேலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், சமூகசெயற்பாட்டாளர் மணிவண்ணன் நிறோஜன், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தார்கள்.

முல்லைத்தீவு - விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணி குழுவின் ஏற்பாட்டிலான தியாகி திலீபனின் நினைவூர்தி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல முன்றிலில் இருந்து பரந்தன் முல்லைத்தீவு வழியாக யாழ். நல்லூர் நோக்கி பயணித்துள்ளது.
இதற்கு பெருமளவானோர் தங்களது வணக்கத்தை செலுத்தி வருகின்றனர்.
செய்தி - சுடரோன்

பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri