புலம்பெயர் உறவுகளின் கோரிக்கையை நிராகரித்த நெடுமாறன்
புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்கள், உறவினர்கள் என பலர் தடுத்தும் அதனை கேட்காமல் பழ நெடுமாறன் விடுதலைப்புலிகளின் தலைவர் பற்றி கருத்தை வெளியிட்டதாக பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“பழ நெடுமாறன் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பொய்யான அறிவிப்பை வெளியிட போகின்றார் என அதற்கு முன்தினமே புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களுக்கு தெரியும்.
பயனளிக்காத முயற்சிகள்
அவர்கள் அவ்வாறான ஒரு கருத்தை சொல்ல வேண்டாம் என பழ நெடுமாறனை தடுக்க பல முயற்சிகள் செய்தும் அவை பயனளிக்கவில்லை.
ஏனென்றால் அங்கு மிகப்பெரிய ஒரு சக்தி ஏதோ ஓர் தேவைக்காக விடுதலைப்புலிகளின் தலைவரை பயன்படுத்த போகின்றார்கள்.
அதாவது விடுதலைப்புலிகளின் தலைவர் இருக்கிறார் என்றொரு விம்பத்தை வைத்துக்கொண்டு ஒரு வன்முறையை உருவாக்கப் போகின்றார்கள். அப்போது அந்த வன்முறை விடுதலைப்புலிகள் செய்ததாக தான் இருக்கும்.
தற்போதைய இவர்களுடைய தேவை இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர வேண்டும்.
இலங்கையில் பௌத்த துறவிகள்
பௌத்த துறவிகள் 13 இற்கு எதிராக களமிறங்கியிருப்பதை தடுக்க வேண்டும். ஏனென்றால் இலங்கையில் பௌத்த துறவிகள் எதாவது ஒன்றை கையில் எடுத்தால் அதை நிறைவேற்ற முடியாது.
அதற்கு சிறந்த உதாரணம் அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் உடன்பாடு அது தொடர்பில் பௌத்த துறவிகள் களமிறங்கிய உடன் அமெரிக்காவே இலங்கையில் இருந்து விலகி சென்றது. ஏனென்றால் அங்கு அதை நடைமுறைப்படுத்த முடியாது என்று.
எனவே 13 ஆவது திருத்தம் தொடர்பில் பௌத்த பிக்குகளின் செயலுக்கான பதிலடியாகவும் சீனாவிற்கு எதிராக நேரடியாக இந்தியா மோதாமல் தமிழர்களை பகடகாயாக பயன்படுத்தப் போகின்ற திட்டமிட்ட செயலாகும்.
2009 இறுதி போரில் சீன ஆயுதங்களை கொடுத்தது ஆனால் 12 ஆயுத கப்பல்களையும் தாக்கி அழித்தது அமெரிக்காவும் இந்தியாவும். இப்படி எல்லோரும் இணைந்து தான் விடுதலைப்புலிகளை அழித்தார்கள். ஆனால் விடுதலைப்புலிகளின் வரலாற்றை திருப்பி பார்த்தால் அவர்கள் எந்த நாட்டுக்கும் எதிராக கருத்து தெரிவிக்கவில்லை.”என கூறியுள்ளார்.

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri
