விடுதலைப்புலிகளின் தலைவரை தேடுவதில் இந்தியாவின் தீவிரம்! புலனாய்வு அமைப்புக்கள் மௌனம் (Video)
இலங்கையுடன், ஒரு நடப்புறவு வேண்டுமென்றால் அதை தமிழர்களை கடந்து செய்ய முடியாது என இந்தியாவிற்கு தெரியும் என்று தமிழகத்தில் இருக்கும் மூத்த பத்திரிக்கையாளர் கா.அய்யநாதன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில்,தமிழர்கள் இன்றி இந்தியா இலங்கையுடன் ஒற்றுமையாக ஒரு உறவுடன் நீண்ட காலம் பயணிக்க முடியாது.
இலங்கையுடன், ஒரு நடப்புறவு வேண்டுமென்றால் அதை தமிழர்களை கடந்து செய்ய முடியாது என இந்தியாவிற்கு தெரியும்.
ஈழத்தமிழர் தமிழ்நாடு இரண்டையும் அனுசரித்து தான் செயற்பட வேண்டும்.
எனவே இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவு மற்றும் உள்நாடு புலனாய்வு பிரிவு எதுவாயினும் இந்திய ஒன்றிய அரசுடன் இணைந்து தான் செயற்படுவார்கள், சிந்திப்பார்கள்.
சர்வதேச அரசியலில் சீனா வகிக்கின்ற ஒரு அழுத்தமான இடம் சிக்கலுக்குரியதாக உள்ளது.
இதேவேளை இந்தியாவின் பாதுகாப்பிற்கு அது அளிக்கக்கூடிய அச்சுறுத்தல்கள் காரணமாக புலனாய்வு பிரிவினர் இந்தியாவின் பாதுகாப்பை நிலைநிறுத்த முற்படுவார்களே தவிர பழைய நிலையில் இருந்துகொண்டு எதையும் யோசிக்கமாட்டார்கள்.
அதனால் தான் அன்று தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பை காங்கிரஸ் ஊக்கப்படுத்தினாலும் கூட, அதை ஆதரித்தது தான் இன்றைக்கு இருக்ககூடிய பாஜக. ஆனால் அவர்களுக்கும் தெரியும் எதாவது ஒரு கால கட்டத்தில் இலங்கையுடன் ஒரு தொடர்பு வேண்டுமென்றால் அது தமிழர்களை தாண்டி செய்ய முடியாது என்றும் ஈழ தமிழர்களுடன் இணைந்து தான் எதையும் செய்ய முடியும்.
பொருளாதார ரீதியாகவோ இராணுவ ரீதியாகவோ இரண்டிலும் சர்வதேச அரசியலுடன் இணைத்து இந்த விடயத்தை பார்க்கும் போது, இது ஒரு தீர்வை தேடுவதற்கான வழியை ஏற்படுத்துகின்றது.
எனவே இந்தியாவின் “ரோ” அல்லது “ஐ.பி” தனித்து நின்று இதை சீர்குலைக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
