மஹிந்த ராஜபக்சவை பார்வையிடச் சென்ற சீன தூதுவர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் பார்வயைிடச் சென்றுள்ளார்.
விஜேராமவில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு சீனத் தூதுவர் விஜயம் செய்துள்ளார்.
ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்ட மூலம் அமலுக்கு வந்த ஒரு நாளிலேயே, சீனத் தூதுவர் இவ்வாறு மஹிந்தவை பார்வையிடச் சென்றுள்ளார்.
சட்ட மூலத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகள் தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லங்களை அரசுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மஹிந்த ராஜபக்ச இன்று அந்த இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலைக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில் சீன தூதரின் விஜயம் அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
சீனத் தூதுவர் மட்டுமன்றி பல்வேறு முக்கியஸ்தர்கள் இன்று காலை முதல் மஹிந்தவின் அதிகாரபூர்வ இல்லத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
