விடுதலைப் புலிகளின் தலைவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் தருணம் இது தானாம்..! வெளியேறும் மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறிய உள்ள நிலையில், இந்த நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார் என மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்புர்வ வீட்டை விட்டு தங்கல்லையில் அமைந்துள்ள கால்டன் வீட்டுக்கு செல்லும் சந்தர்ப்பத்தில், விஜேராம மாத்தையில் அமைந்துள்ள வீட்டிக்கு அருகில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“இன்றைய நாள் அரசாங்கத்திற்கு மிகவும் சந்தோசமான நாள். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான டயஸ்போராக்களுக்கு சந்தோசமாக இருக்கும் என நினைக்கிறேன்.
உத்தியோகப்பூர்வ இல்லம்
அரசாங்கம் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை விட்டு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான டயஸ்போராக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் நாளாகும். நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் நிலையில் முன்னாள் ஜனாதிபதியை வீட்டை விட்டு அனுப்புவதற்கு அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் கொடுத்தனர்.
ஆனாலும் நாங்கள் அதற்கு அஞ்சவில்லை. நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட வரப்பிரதாசங்கள் இல்லாதொழிக்கும் சட்டத்திற்கு மதிப்பளித்து 24 அல்லது 48 மணித்தியாலங்கள் கூட இல்லத்தில் இருப்பதற்கு கூட தீர்மானிக்கவில்லை.

இன்று தங்கல்லைக்கு செல்கிறார். ஆனால் உத்தியோகப்பூர்வ இல்லத்தை அரசாங்கத்திற்கு பாரப்படுத்த ஒரு வாரம் தேவைப்படும். ஏனென்றால் இல்லத்தில் உள்ள தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை உத்தியோகப்பூர்வமாக கையளிக்க வேண்டும்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam