அண்டை நாடுகளை தாக்க வேண்டாம்..! ஈரானுக்கு ஹமாஸ் முக்கிய கோரிக்கை
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் தனது அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை ஹமாஸ் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி! சந்தேகத்துடன் இருந்த அயதுல்லா அலி கமேனி - வெளியாகும் புதிய தகவல்கள்
ஈரான் பதிலடி கொடுக்கும் அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளை இலக்கு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.
ஈரானுக்கு ஹமாஸ் முக்கிய கோரிக்கை
ஈரான் ஹமாஸின் நீண்டகால நட்பு நாடாகவும், ஆதரவாளராகவும் இருந்து வரும் நிலையில், ஹமாஸ் விடுத்துள்ள இந்த வேண்டுகோள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

விரிவடைந்து வரும் இந்த மோதலைக் கட்டுப்படுத்தவும், பிராந்திய அமைதியை நிலைநாட்டவும் சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் அண்மையில் வளைகுடா நாடுகள் சிலவற்றின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியிருந்தது.
இது முழு பிராந்தியத்திலும் ஒரு பாரிய போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ள சூழலிலேயே ஹமாஸ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.