ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரை துடைத்த மகிந்த! அரசியல் சூழ்ச்சியால் நாமலை துன்புறுத்தும் அரசாங்கம்
நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்று வழிநடத்தும் இளம் தலைவர் நாமல் ராஜபக்ச என்றும், எதிர்காலத்தில் அவர் கடுமையான சவாலை எதிர்கொள்வார் என்பதை அறிந்து அரசாங்கம் அவரை அமைதியாக்க முயற்சிக்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஹோட்டலில் நடைபெற்ற கட்சி கூட்டத்திற்கு பிறகு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
நாமல் ராஜபக்சவின் தன்னம்பிக்கை
சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படும் ஒவ்வொரு முறையும் நாமல் ராஜபக்சவின் தன்னம்பிக்கை வெளிப்படுகிறது என்றும், அவரை 10 சிறைகளுக்கு அனுப்பினாலும், அவருடன் சேர்ந்து பொதுஜன பெரமுன நீதிக்காகப் போராடும் என்றும் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களை மிகவும் துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு காரணம், எதிர்காலத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் நாமல் ராஜபக்ச தலைமையிலான கட்சியிடமிருந்து வரும் என்பதை அவர்கள் அறிந்திருப்பது தான்.
கட்சி உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்படும் போது தான் கட்சி மேலும் வலுப்பெறும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
போரை முடிவுக்கு கொண்டுவந்து, இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரைத் துடைத்த தலைவர் மகிந்த ராஜபக்ச ஆவார். அவர் உண்மையில் வீண் பேச்சு பேசாமல் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார். வீண் பேச்சு பேசாமல் 38,000 கிலோமீட்டர் சாலைகளை அவர் அமைத்துக்கொடுத்தார்.
அரசாங்கம் தேர்தல்களை ஒத்திவைக்க காரணம்
மகிந்த ராஜபக்ச ஒரு தேர்தலை கூட ஒத்திவைக்கவில்லை. நாம் தோற்றுவிடுவோம் என்று தெரிந்திருந்தும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதுதான் ஜனநாயகம்.

அரசாங்கம் தேர்தல்களை ஒத்திவைக்கத் தயாராகி, ஒன்றன்பின் ஒன்றாகக் காரணங்களைக் கூறிக்கொண்டிருக்கிறது. முடிந்தால், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துங்கள் என்று நாங்கள் சவால் விடுகின்றோம்.
இலங்கையில் எத்தனை கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? இலங்கையில் எத்தனை அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்துள்ளன? ஆனால் இன்று அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது பொதுஜன பெரமுன மட்டுமே?
பொதுஜன பெரமுனவிற்கு மட்டுமே தொடர்ச்சியாக சவால் விடுகிறார்கள் என்பதிலிருந்தே இது தெளிவாகிறது. நாமல் ராஜபக்சவை காவலில் வைக்க யாராவது தயாராகின்றார்கள் என்றால், அங்கே அடக்குமுறை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan