முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருலப்பனையில் தனது இல்லத்தில் இருந்தபோது ஏற்பட்ட இதய பாதிப்பு பிரச்சினை காரணமாக இன்றைய தினம் (12) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வைத்திய குழுவினர் சிகிச்சை
மேலும், கடந்த சில நாட்களாக அவர் பல வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

புகழ்பெற்ற நிபுணர்கள் குழு ஒன்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தேவையான அவசர வைத்திய சிகிச்சையை தற்போது அளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரைப் பார்ப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் அறியமுடிகிறது.
இருப்பினும், இன்று காலை திடீரென ஏற்பட்ட இந்த உடல்நலக்குறைவு காரணமாக, அவரை உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மகிந்த ராஜபக்ச சிகிச்சைக்காக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அவரது ஊடகப்பிரிவு மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan