இலங்கையில் அடுத்தடுத்து சிக்கப் போகும் 325 ஆபத்தான வர்த்தகர்கள்
இலங்கையில் அடுத்தடுத்து சிக்கப்போகும் 325 போதைப்பொருள் வர்த்தகர்களின் பட்டியல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகச் செயல்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் நாசகார நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வரும் நிலையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட குற்றங்கள் மூலம் ஈட்டப்பட்ட 70 சொத்துக்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளன.
வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ள மற்றும் இந்நாட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்துள்ள குறித்த 325 வர்த்தகர்கள் தொடர்பிலான முழுமையான அறிக்கை பொலிஸாரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொய்யான குற்றச்சாட்டு
இவ்வாறானதொரு பின்னணியில், எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசாங்கத்தை நிலையற்றதாக்குவதற்கு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலகொடைஅத்தே ஞானசார தேரர் தொடர்பில் முன்னாள் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள அன்று கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணான கருத்துக்களை இன்று வெளியிட்டு வருகின்றார்.
இவ்வாறானதொரு திட்டத்தின் மறைமுக நோக்கங்களைக் கொண்டா அவர் இவ்வாறான தீவிரமான கேள்விகளை எழுப்பி வருகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.