மகிந்த ராஜபக்சவின் உடல்நிலைத் தொடர்பில் போலித் தகவல்! வைத்தியசாலையில் ஏன் அனுமதிக்கப்பட்டார்..
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை குறித்து போலியான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மகிந்த ராஜபக்சவின் ஊடகப்பேச்சளாரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச வயது மூப்பு காரணமாக முகம்கொடுக்கும் சாதாரண உடல்நலப் பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளதாகவும், இதன் காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அவர் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளதாகவும் மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மனோஜ் கமகே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
போலி பிரசாரங்களா..
இந்தநிலையில் மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை குறித்த மனோஜ் கமகே மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், மன ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளானதாகவும் போலி தகவல்கள் பரப்பப்படுகின்றன.
மகிந்த ராஜபக்ச வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உடல்நிலை குறித்து பரப்பப்படும் போலியான பிரச்சாரங்கள் அவரது ஆளுமையைச் சிறிதும் பாதிக்காது.
தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு மத்தியில் மகிந்த ராஜபக்ச பலவீனமடைந்துவிட்டதாகச் சித்தரிக்கும் முயற்சியாகவே எதிர்ப்பாளர்கள் இத்தகைய பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் பிரசாரங்களைப் பரப்பி வருகின்றனர்.

மகிந்த ராஜபக்ச போன்ற ஒரு மாபெரும் ஆளுமையை இத்தகைய பொய்யான தகவல்கள் மூலம் முறியடித்துவிடலாம் என்று நினைப்பது அவருக்கு எதிரானவர்களின் வெறும் கற்பனை மட்டுமே.
எனவே, மகிந்த ராஜபக்ச மீது மரியாதை செலுத்தும் மக்கள், அவரது உடல்நிலை குறித்து பரப்பப்படும் பொய்யான வதந்திகளால் கவலையடைய வேண்டாம். அவர் தற்போது நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்கின்றார். சாதாரண பரிசோதனைகளுக்காகவே வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan