செங்கடல் பதற்றம்: நன்னம்பிக்கை முனை வழியாக எண்ணெய் கப்பல்கள் பயணம்
ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெற்கு செங்கடலில் கப்பல் போக்குவரத்திற்கு விடுத்துள்ள புதிய அச்சுறுத்தலைத் தொடர்ந்து, 'டார்ம் இன்னோவேஷன்' என்ற டேங்கர் கப்பல் ஆசியாவிற்கான தனது பயணப் பாதையை மாற்றி அமைத்துள்ளது.
டென்மார்க் கொடியுடன் பயணிக்கும் இந்த எண்ணெய் பொருட்கள் ஏற்றிச் செல்லும் கப்பல், சவூதி அரேபியாவின் 'யான்பு' துறைமுகத்தில் இருந்து சுமார் 5,00,000 பெரல் 'நாப்தா' எரிபொருளை ஏற்றிக்கொண்டு ஜப்பான் நோக்கிப் புறப்பட்டது.
இருப்பினும், பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தெற்கு செங்கடல் வழியாகச் செல்வதைத் தவிர்த்து, சுயஸ் கால்வாய் மற்றும் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை சுற்றியுள்ள நீண்ட கடல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக கப்பலின் உரிமையாளரான 'டார்ம்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாக்குதல்
கப்பல் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவிற்கு எதிராக ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடற்படை முற்றுகையை அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

செங்கடலின் பாப் எல்-மந்தேப் நீரிணை வழியாகச் செல்ல முடியாமல் மாற்றுப் பாதையைப் பயன்படுத்தும்போது, ஆசியாவிற்குச் செல்லும் எரிபொருள் கப்பல்களின் பயண நேரம் மேலும் 30 நாட்கள் வரை அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏமன் கடலோரப் பகுதியில் ஹூதி அமைப்பினர் நடத்திய தாக்குதல்களால் சுயஸ் கால்வாய் வழியிலான கப்பல் போக்குவரத்து 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan