இலங்கையில் பணம் அச்சிடாமல் பணவீக்க வீதம் ஏன் உயர்கிறது.. அரசாங்கத்திடம் ரவி கருணாநாயக்க கேள்வி
பணம் அச்சிடப்படுவதாகக் கூறி முன்னைய அரசாங்கங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், தற்போது பணம் அச்சிடப்படவில்லை என்றால் பணவீக்க வீதம் எவ்வாறு தொடர்ந்து அதிகரிக்கிறது என்பதை அரசாங்கம் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பண வீக்கம் உயர்கிறது..
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“முன்னைய அரசாங்கங்கள் பணம் அச்சிடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டன.

ஆனால் தற்போது பணம் அச்சிடப்படவில்லை என்றால் பணவீக்க வீதம் எவ்வாறு அதிகரிக்கிறது என்பது குறித்து கேள்வி எழுகிறது” எனக் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கை மத்திய வங்கி சரியான பொருளாதார முன்னறிவிப்புகளை மேற்கொள்வதுடன், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான முறையான திட்டங்களையும் வகுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri