மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டமை குறித்து ரணில் வெளியிட்டுள்ள தகவல்
வருமானத்தை ஈட்டக்கூடிய வெளிப்படையான திட்டத்தின் கீழ் மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், 2024ஆம் ஆண்டில் 4 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்படையான பயிற்சி
மேலும், தமது அரசாங்கம் தொண்டு நிறுவனங்களுக்கு மதுபான உரிமங்களை வழங்கவில்லை, மாறாக ஒரு புதிய வெளிப்படையான பயிற்சியை அறிமுகப்படுத்தியது.

இது கடினமான காலகட்டத்தில் அரசாங்கத்திற்கு கூடுதல் வருவாயைப் பெற உதவியது, கூடுதல் வருமானத்தை ஈட்டவே இந்த புதிய உத்தியைக் கடைப்பிடித்ததாக ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு 316 மதுபான அனுமதிப்பத்திரங்கள் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டதாக, அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்திற்கு பதிலளிக்கும் வகையில் விக்ரமசிங்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri