நகரப்பகுதிகளில் நாயினால் ஏற்படும் போக்குவரத்து அச்சம்: பயணிகள் கோரிக்கை
நகரப்பகுதிகளில் நாயினால் ஏற்படும் போக்குவரத்து அச்சம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் போது நாய்களால் அச்சமேற்படுத்தப்படுவதாக பயணிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனினும், இதனுடன் தொடர்புடைய யாதொரு தரப்பினரும் இது தொடர்பில் கவனமெடுத்து நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தர்மபுரம் மற்றும் விசுவமடு நகர் பகுதிகளிலேயே இந்த போக்குவரத்து அச்சம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரட்டைக் குற்றச்சாட்டுக்கள்
அதிகமான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளாக விசுவமடு மற்றும் தர்மபுரம் நகரப் பகுதிகள் உள்ளன.
அத்தோடு, இந்த இரு நகரங்களை ஊடறுத்து முல்லைத்தீவு பரந்தன் வீதி (A35) செல்வதால் அதனூடாக நீண்ட தூரப் பயணிகளின் பயணங்களும் சமநேரத்தில் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.
மாலை நேரப் பொழுதில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதையும் இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும்.
இரவுப்பொழுதினை ஒளியூட்டுவதற்காக வீதி விளக்குகள் போதியளவில் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலையும் இந்த நகரப் பகுதிகளில் பெறப்பட்ட அவதாரங்களில் உள்ளடங்கின்றது.
அதிக மக்கள் வந்து செல்லும் நகரப்பகுதிகளாக இருந்த போதும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான ஏற்பாடுகள் போதியளவில் இல்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறது.
வெளிச்சம் அதிகமான ஒரு பாதையில் நாய்களால் ஏற்படக்கூடிய போக்குவரத்து அச்சம் குறைவாகவே இருக்கும் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
இந்த வகையில் தர்மபுரம் மற்றும் விசுவமடு நகரப்பகுதிகளில் போதியளவிலான இரவு மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வீதி ஒளியூட்டப்படல் அவசியமாகும். அவ்வாறில்லாத இந்நிலை மற்றொரு குற்றச் சாட்டாகவும் இருக்கின்றது.
நாய்களால் நெருக்கடி
இந்நகர வீதிகளில் அதிகளவான நாய்கள் கட்டாக்காலி நாய்களாக திரிவதனால் விபத்துக்களை அவை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நெருக்கடியை தாம் எதிர்கொள்வதாக பயணிகளில் பலரும் குறிப்பிடுகின்றனர்.
எதிர்பாராத நேரத்தில் வாகனங்களுக்கு குறுக்காக பாயும் போது நாயுடன் வாகனம் மோதிக் கொள்வதை தவிர்ப்பதற்காக திடீரென தடுப்பிடும் பொழுது, ஏற்படும் அசௌகரியம் பாரிய போக்குவரத்து மனவுழைச்சலுக்கும், அச்சத்திற்கும் காரணமாகிப் போகும் சூழல் அப்பகுதியில் இருக்கின்றது.
இது தொடர்பாக உளநல ஆலோசகராக பணியாற்றும் பயணியொருவரும் தன் கருத்துக்களை பயணிகளுடனான கேட்டல்களின் போது பகிர்ந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாய்களால் உந்துருளியில் பயணம் செய்வோரே அதிகளவில் நெருக்கடிக்குள்ளாவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அதிகமான நாய்கள் வீதியிலேயே படுத்துறங்குவதை அவதானிக்கலாம்.இந்த நாய்களால் ஏற்படும் நெருக்கடியென்து தர்மபுரம் மற்றும் விசுவமடு நகர் பகுதிகளில் பல வருடங்களாக தொடரும் அசௌகரியம் என நகர்ப்புற பணியாளர் ஒருவரும் இது தொடர்பில் குறிப்பிட்டு கருத்துரைத்து இருந்தார்.
பிரதேச சபையின் கவனம்
தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு முன்னும் வீதியில் நாய்கள் நடமாடுவதோடு பல நாய்கள் பொலிஸ் நிலையம் செல்லும் வாசலில் வீதியில் படுத்துறங்குகின்றன. அதனை தாம் அவ்வீதியூடாக யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு சென்று வரும் நாட்களில் அவதானித்து இருந்ததாக இந்த தேடலின் போது பாடசாலை ஆசிரியர்கள் சிலரும் கூறுகின்றனர்.
பிரதேச சபைகளின் கவனத்திற்கு இது தொடர்பில் உரிய முற்படுத்தல்களை அப்பகுதி மக்கள் யாரும் செய்திருப்பதாக அறிய முடியவில்லை.
அவ்வீதியூடாக பயணிக்கும் பயணிகளும் இந்நெருக்கடி நிலையை தவிர்ப்பதற்காக தங்கள் அசௌகரியங்களை ஒரு பிரச்சினையாக முன்வைக்கத் தவறியிருப்பதையும் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.
சமூகநலன் கருதி பிரதேச சபைகள் மற்றும் பிராந்திய சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நாய்களின் உரிமையாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் பொருத்தப்பாடான செயற்பாடுகளால் பயணிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணலாம் என்பதை இங்கே சுட்டிக்காட்டலாம்.
இந்த விடயம் உரிய தரப்புக்களால் கவனமெடுக்கப்பட்டு நல்ல ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தால் A35 வீதியூடான பயணம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
