வேலைக்கு சென்ற இளைஞன் பரிதாபமாக மரணம்
ஹொரண - களுவெல்லாவ ஊடாக புளத்சிங்கள செல்லும் வீதியில் திவலகடை சந்திக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 18 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
புளத்சிங்களவில் இருந்து ஹொரண நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதே திசையில் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளை முந்துவதற்கு முற்பட்ட போது, ஆடைத் தொழிற்சாலைக்குச் சொந்தமான வேன் ஒன்றில் சிக்கியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் புளத்சிங்கள பிரதேசத்தை சேர்ந்த கவீஷ் லக்ஷான் ஹேமரத்ன என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
பிரபல பேக்கரி
இவர் ஹொரண பிரதேசத்தில் உள்ள பிரபல பேக்கரி உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருபவர் என தெரியவந்துள்ளது.

நேற்று காலை 6.30 மணியளவில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.