இலங்கையை மீண்டும் தோற்கடித்த தென்னாபிரிக்க டெஸ்ட் அணி
சுற்றுலா இலங்கை(Srianka) அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி, தொடரையும் 2- 0 என்ற ரீதியில் வெற்றி கொண்டுள்ளது.
சென் ஜோர்ஜியா பூங்காவில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, தமது முதல் இன்னிங்ஸில் 358 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 317 ஓட்டங்களையும் பெற்றது.
இலங்கை அணி
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 328 ஓட்டங்களையும், இரண்டாம் இன்னிங்ஸில் வெற்றி ஓட்ட இலக்கை எட்டாத 238 ஓட்டங்களையும் பெற்று, போட்டியில் 109 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டது.
ஏற்கனவே இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி, 233 ஓட்டங்களால் இலங்கை அணியை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |