எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - விவாதத்திற்கான திகதி நிர்ணயம்
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு
அடுத்த நாடாளுமன்ற வாரத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து இன்று (19) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

"எரிசக்தி அமைச்சின் தற்போதைய செயற்பாடுகள், முறையற்ற நிர்வாகம் மற்றும் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்குத் தீர்வு காணாமை தொடர்பாக முன்வைக்கப்படும் அதிருப்தியின் வெளிப்பாடாகவே இந்தப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது. இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கையொப்பமிட்டுள்ளனர்.
இதற்கமைய, குறித்த விவாதம் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, கியூ.ஆர். முறைமையில் உள்ள சிக்கல்கள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு முன்மொழிவு ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் QR குறியீடு பதிவில் தொடரும் சிக்கல்! போலி இணையத்தளங்கள் குறித்து பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு