மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாக திறக்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மேல் கொத்மலை ஒரு வான் கதவு இன்று (04.08.2026) அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் அதிகாலையிலும் நீர்மட்டம் அதிகரித்ததால் வான் கதவு திறந்து நீரை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடருமானால், ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கும் அபாயம் உள்ளது.
இதனால், அணைக்கட்டிற்கு கீழ் உள்ள கொத்மலை ஆற்றின் இரு கரைகளிலும் வாழும் மக்கள் தொடர்ந்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் நிலவும் தொடர் மழை காரணமாக, செயின்ட் கிளேயர் மற்றும் டெவோன் ஆகிய அருவிகளில் வழக்கத்திற்கு மாறாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.